புத்தளம் மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிப்பு!.
உடப்பு க.மகாதேவன்
புத்தளம் மாவட்டத்தில் மிகவும் வேகமாக பரவிச் செல்லும் ஒரு வகையான நோய் காரணமாக (கபில நிறம்)தெங்குச் செய்கையானது பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தெங்குச் செய்கையாளர்கள் பாரிய சிக்கல்களை எதிர் தோக்கி வருகின்றனர். வெள்ளை ஈக்கள் மற்றும் சிவப்பு நிற கருப்பு வண்டுகள் தங்களின் தென்னை மரத்தினை பாதித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தென்னை ஓலைகள் ஒருவகை வெள்ளை பூஞ்சு நிறத்தில் காணப்படுகின்றது.சந்தையில் தேங்காய்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இந்த பாதிப்பு பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது.
இதன்படி புத்தளம் மாவட்டத்தில் 5000 ஏக்கர் தெங்குச் செய்கை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது சம்பந்தமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு தெங்கு உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments