Breaking News

கற்பிட்டி வன்னிமுந்தல் மொஹமட் ஹனிபா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வு

கற்பிட்டி வன்னிமுந்தலில் கடந்த 26 வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வரும் மொஹமட் ஹனிபா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் இம்முறையும் சிறப்பாக செவ்வாய்க்கிழமை (17) பாலர் பாடசாலையின் அதிபர் ஏ.சீ.ஐ  சாதிக்கா தலைமையில்  அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந் நிகழ்வின் அதிதிகளாக. கற்பிட்டி நகரின் ஏனைய பாலர் பாடசாலை அதிபர்கள் மற்றும் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் றொசான்  மற்றும் லஹிரு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 


மேற்படி மொஹமட் ஹனிபா பாலர் பாடசாலை 1999 ம் ஆண்டு ஆரம்பிங்கப்பட்ட போது பாலர் பாடசாலைக்கு என தனது சொந்த காணியை வழங்கி வைத்த முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் மர்ஹூம் எம் எச் மொஹமட் (உஹது) நினைவு கூறும் பாலர் பாடசாலையின் ஆரம்பம் முதல் இன்று வரை தனி ஒரு பெண்ணாக அதிபராக கடமை புரிந்து வரும் ஏ.சீ.ஐ சாதிக்கா இக் கலை நிகழ்ச்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய பாலர் பாடசாலையின் பெற்றோர்களுக்கும் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)












No comments

note