உடப்பு மீன்வாடியில் சிறிதளவு கடல் நீர்
(உடப்பு க.மகாதேவன்)
உடப்பு 6ம் வட்டாரப் பகுதியில் மீன் மற்றும் கருவாடுகளை சந்தைப் படுத்துவதில் பாரிய கஷ்டம் உள்ளதாக உடப்பு வாழ் மீனவர்கள் கூறுகின்றனர்.
தமது மீன்வாடி கடற்கரையை அண்மித்து உள்ள நிலையில் புதன் நள்ளிரவு (18)கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் மீன்வாடி வரை வந்ததாகவும்,குறிப்பிட்ட நேரம் சொல்ல முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இவர்கள் கருவாடு இடுவதில் கூடிய இலாபம் கிடைக்கவில்லை என்றும்,கருவாட்டுக்குரிய உப்பு 2500ரூபா வரை உள்ளதாகவும் கூறுகின்றனர்.இதன் போது நெத்தலி கருவாடு கிலோ 850ரூபாய் வரை விற்பனைக்கு செல்வதாகவும் மேலும் குறிப்பிட்டனர்.
No comments