8 உயிர்கள் கற்றுத்தந்த பாடம் காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில்.
{முஹம்மத்-மர்ஷாத்}
வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி - மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே வீதியின் இருமருங்கிலும் தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் இப்பகுதியில் ஏற்படும் வெள்ள நிலையின் அளவீட்டை இலகுவாக கணீப்பீடு செய்வதற்காகவும் அவ்வழியாக பயணம் செய்யும் பொதுமக்கள் வாகனங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இத்தூண்கள் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 6 அடிக்கும் அதிகமான அளவீட்டுடன் இத்தூண்கள் கொங்கிறீட் கற்களைக் கொண்டு தடுப்புச்சுவர் போன்று அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.
எனவே வீதியின் இருமருங்கில் அமைக்கப்படும் தடுப்புச்சுவரில் மீதியாக பெயிண்ட் பூசப்பட்டு நீரின் மட்டம்,உயரம் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
No comments