Breaking News

சிறுபான்மை சமூகத்தின் தகுதியான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

முஸ்லிம், தமிழ் சிறுபான்மை சமூகம் சார்பில் பாராளுமன்றத்தில் கதிரைகளை சூடாக்காமலும், ஆட்சி அதிகாரங்களுக்கு சோரம்போகாமலும், எதிர்த்தரப்பில் இருந்துகொண்டு தங்களது பதவிக்காலத்தில் இடைவிடாது தீவிரமாக பாராளுமன்றத்தில் செயற்பட்டவர்கள். 


கருத்து வேறுபாடுகளுக்கப்பால் ரவுப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், றிசாத் பதியுதீன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணாக்கியன், சுமந்திரன், மனோகணேசன், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர்களின் வேகமான செயற்பாட்டினை மறந்துவிட முடியாது.   


ஜனாஸா எரிக்கப்பட்டபோது இன, மத வேறுபாடுகளுக்கப்பால் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதனை நினைவுகூறுகிறேன்.   


எனவே பாராளுமன்ற அனுபவமும், வேகமான செயற்பாடுகளும், வாதத் திறமையும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உரித்தான திறமையும், சட்டங்கள் பற்றிய அறிவும் கொண்ட இவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வது அந்தந்த சமூகத்தை சேர்ந்த மாவட்ட மக்களின் கடமை என்பதனை மக்கள் உணர வேண்டும். 


பணத்துக்கும், வேறு சலுகைகளுக்கும் ஆசைப்பட்டு தகுதியற்றவர்களை பாராளுமன்றம் அனுப்பிவிட்டு பின்பு அழுது புலம்பி ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note