தலைவர்கள் எடுக்கின்ற தீர்மானங்களில்தான் சமூகத்தின் தலைவிதி தங்கியுள்ளது!. - முகம்மத் இக்பால்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தன்னை அழைத்ததாக அதாஉல்லாஹ் அவர்கள் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக கூறியிருந்தார். அதேநேரம் அதாஉல்லாஹ் அவர்கள் மு.கா உடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தான் ஒத்துழைப்பதாக AL. தவம் அறிவித்திருந்தார்.
அவ்வாறு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் அழைப்பை ஏற்று ஒன்றாக போட்டியிட்டிருந்தால் இந்த தேர்தலில் அதாஉல்லாஹ் அவர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருப்பார்.
அது மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தில் அரசியல் சூழ்நிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். அது வேறு மாவட்டங்களிலும் தாக்கம் செலுத்தியிருக்கும். நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்றிருக்கலாம்.
பிடிவாதங்களை தவிர்த்து தலைவர்கள் எடுக்கின்ற தீர்மானங்களில்தான் சமூகத்தின் தலைவிதி தங்கியுள்ளது.
முகம்மத் இக்பால்
No comments