வடகிழக்கு தமிழ் மக்களின் வியப்பான அரசியல்.
தமிழர்களின் பிரதான அரசியல் கோரிக்கைகளில் ஒன்று இணைந்த வடகிழக்கு மாகாணமாகும். 1987 இல் இருந்து அது ஒரே மாகாணமாக தற்காலிகமாக இணைந்திருந்தது.
ஆனால் இன்று ஆட்சிபீடம் ஏறியுள்ள JVP யினர் அன்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததன் மூலமாக 2006 இல் இரு மாகாணங்களையும் பிரித்தனர்.
விடையம் என்னவென்றால், தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்து கபளீகரம் செய்தது மட்டுமல்லாது, தமிழர்களுக்கான சமஸ்டித் தீர்வினை JVP யினர் ஒருபோது ஏற்றுக்கொண்டதில்லை.
மற்றும் விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இராணுவத்தில் ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிங்கள கிராமங்களிலிருந்து இராணுவத்துக்கு இளைஞர்களை திரட்டியதில் JVP யின் பங்களிப்பு பிரதானமானது.
அவ்வாறான JVP யினர்மீது கோபம்கொள்ளாமல் வடகிழக்கு தமிழ் மக்கள் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளதானது வியப்பாக உள்ளது.
இது தமிழ் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா ? இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு தமிழகளின் அடிப்படை அரசியல் சென்றடையவில்லையா ? அல்லது தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார்களா ? JVP யின் பிரச்சார உத்திகளில் மயங்கிவிட்டார்களா ? அல்லது JVP யினர் தங்களது கொள்கையை மாற்றியுள்ளார்களா ?
எனவே அடுத்தடுத்து வருகின்ற தேர்தல்களில்தான் இதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள முடியும் ?
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments