2023 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா" - 2024
நூருல் ஹுதா உமர்
2023 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா" - 2024 வெல்லவாய Motivirus கல்வி மற்றும் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் பஸீஹா பர்வின் தலைமையில் மொ/ மஹாவெலமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெல்லவாய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே. சுசில் விஜேதிலக கலந்து கொண்டதுடன், கௌரவ மற்றும் விசேட அதிகாரிகளாக வெல்லவாய வலயக் கல்விப் பணிமணை உதவிக் கல்விப் பணிப்பாளர் எச்.வி. தர்மசிறி, ஆலோசனை விவகாரங்கள் மற்றும் இலங்கை TTC மையத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சர்ஜூன், வெல்லவாய வலய பாடசாலைகளின் அதிபர்கள், மொழி பயிற்றுவிப்பாளர் எம்.யு.எம். பாயிஸ், கல்வி நிர்வாகிகள், சர்வ மத தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் உட்பட பல கல்விமான்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந் நிகழ்வில் மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டது டன் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
No comments