முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் யார்
தேசிய கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் அந்த கட்சிகளுக்கு பிரதிநிதியாக இருக்கலாமே தவிர, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்க முடியாது.
கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்காக இந்த இரு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்திய சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஒப்பந்தங்கள் செய்துகொண்டார்களே தவிர, தேசிய கட்சியில் உள்ள தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுடன் அல்ல.
இது சிறுபான்மை பிரதிநிதி என்பதற்கான அங்கீகாரம்.
இவ்வாறு நான் கூறுவதனால், தேசிய கட்சிகளில் உள்ளவர்கள் இந்த கருத்து பிழை என்று கூறலாம். அது உங்களது அதீத நம்பிக்கை. அதனால் பல்கலைக்கழகங்களில் உள்ள அரசியல்துறை பேராசிரியர் எவரிடமாவது கேட்டு தெளிவு பெறலாம்.
அரசியலை புரிந்துகொள்வோம்.
முகம்மத் இக்பால்
No comments