Breaking News

எமது தனித்துவமும், பேசா மடந்தைகளும்

1989 இல் மு.கா தலைவர் அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றம் செல்லும் வரைக்கும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட எந்தவொரு பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாத நிலை இருந்தது. 


அவ்வாறு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முற்பட்டபோது “உங்களுக்கு விருப்பம் என்றால் இருக்கலாம், இல்லாவிட்டால் விலகிச் செல்லலாம்” என்று அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கூறியது அப்போது பிரபலமாக பேசப்பட்டது. 


அன்று ஐ.தே.கட்சி, ஸ்ரீ.ல.சு.கட்சி ஆகிய காட்சிகளில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தனது சமூகத்துக்காக குரல் கொடுக்க முடியாது. அதுவே முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்துக்கு நியாயமான பிரச்சாரமாக அமைந்தது.   


அதாவது “தேசிய காட்சிகளில் உள்ள அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசா மடந்தைகள்” என்று தலைவர் அஷ்ரப் பிரச்சாரம் செய்தார்.  


எனவேதான் முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஒரு தனியான இனமாக வாழ்கின்றார்கள் என்று உலகிற்கு தெரியப்படுத்தியது அன்றைய அஷ்ரப்பின் பாராளுமன்ற உரைகளாகும்.


எனவே எங்களது தனித்துவம் எப்போதும் பாதுகாக்கப்படல் வேண்டும். 


முகம்மத் இக்பால்




No comments

note