Breaking News

அம்பாறை மாவட்ட கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள கலைஞர்களுக்கு அவர்களது கலையின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவையைக்  கௌரவப்படுத்தும் முகமாக அரசினால் அங்கீகாரமளிக்கப்பட்டு வழங்கப்படும் "தேசிய  கலைஞர் அடையாள அட்டை" வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது. 


சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீக்காவின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸானின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன்  பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேசசெயலாளர் என்.எப். அய்மா மற்றும் ஏனைய பிரதேச செயலகங்களில் பணியாற்றும் கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


இதன்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் இருந்து இம்முறை 26 பேர் கலைஞர் அடையாள அட்டைக்காக தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேசிய ரீதியில் "கலைஞர் அடையாள அட்டை" வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில்,  சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலிருந்து ஏ. இஸ்ஸதீன், ஐ.எல்.எம். முபாரக், எம்.எம். மன்சூர், ஏ.எல். மன்சூர், எம். ஜெமில், ஏ.பி. காலிதீன், ஏ.எம்.ஜப்பார், ஏ. ஆர்.எம் .நௌபீல், யு.கே.எம். றிம்ஸான், எம்.ஏ.சி.எஸ். ஜெஸீனா, எம்.ஏ. பைஸர், ஏ.எம்.சுலைமாலெப்பை, எம்.ஐ.எம். அபூபக்கர் ஆகியோரும் திருக்கோவில் பிரதேச செயலகத்திலிருந்து பி. பாலகிருஷ்ணன், எஸ். கார்த்திகேசு, எஸ். ஜெயனந், எம். கிருஷ்ணப்பிள்ளை, ஆகியோரும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலிருந்து எஸ்.எச். மும்தாஜ் பேகம், எப். முஹம்மத் மூர்த்தலா, எம்.ஐ. ஜெஸ்மா, இஸட்.ஏ. ரஹ்மான், வை.ஏ. அப்துல் லத்தீப், சம்மாந்துறை பிரதேச செயலகத்திலிருந்து எஸ். எம். முஹம்மத் ஜவாத், ஏ. சுதர்சன், ஏ.பி.பெனாசிர் ஜஹான் ஆகியோரும் இறக்காமம் பிரதேச செயலகத்திலிருந்து எம்.சமுக்கூன் ஆகியோருக்கு இம்முறை கலைஞர் அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.


சாய்ந்தமருது மருதூர் கலைமன்றத்தின் பொல்லடி குழுவிலிருந்து 07 பேர் தேசிய கலைஞர் அடையாள அட்டைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


மருதூர் கலை மன்ற உறுப்பினர்களுக்கு "தேசிய கலைஞர் அடையாள அட்டை" கிடைப்பதற்கு மிகவும் பாடுபட்ட  அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகா மற்றும் மருதூர் கலைமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன், மன்றத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர் ஆகியோருக்கு மன்றத்தின்  கலைஞர்கள் அனைவரும் தமது நன்றியைத் தெரிவிக்கின்றனர்.










No comments

note