Breaking News

கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்காவின் சுயதொழில் பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும்

(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன்  கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு  பயிற்சி பட்டறையை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் திங்கட்கிழமை (25) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் செடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ ஆர்.எம் முனாஸ் தலைமையில் இடம்பெற்றது 


இந் நிகழ்வில்  அதிதிகளாக கற்பிட்டி பிரதேச செயலக உதவி செயலாளர் சந்தியா பிரியதர்ஷினி,  தென்னை அபிவிருத்தி அதிகார  சபையின் சிரேஷ்ட ஆய்வாளர் சந்தன ரத்நாயக்க , கள உத்தியோகத்தர் அனுருந்த சுவர்வீர மற்றும் கற்பிட்டி நிர்வாக கிராம உத்தியோகத்தர் பீ எம் எம் பைனஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விசேட அதிதிகளாக கற்பிட்டி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தித்  உத்தியோகத்தர் சாந்திலதா, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்  சிரானி சமரசிங்க, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வாயிஷா,

மற்றும்  சமுக செயற்பாட்டாளர் என் மஞ்சுளா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனருடன் பயிற்சி நெறியை வெற்றி கரமாக பூர்த்தி செய்த மகளிர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.










No comments