JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளம் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

அகில இலங்கை ஷொடோகன் கராத்தே சம்மேளனத்தினால்  நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான கராத்தே  சுற்றுப் போட்டியில் புத்தளம் மாணவர்கள் மூவர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளர்கள்


தேசிய மட்டத்திலான இந்த கராத்தே சுற்றுப்போட்டி அண்மையில் (24) கொழும்பு சுகதாஸ உள்ளக        விளையாட்டரங்கில்  நடைபெற்றது. 


மேற்படி  கராத்தே சுற்றுப் போட்டியில் "வசீ ஷொடோக்கன் கராத்தே டூ" (WASHI SHOTOKAN KARATE DO ) சங்கத்தின் மாணவர்களே இந்த சாதனையை நிலை நாட்டி உள்ளனர். 


புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் 08 ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி எம்.ஆர்.எம்.அம்னா, 13 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். இம்மாணவி

மதுரங்குளி கடையாமோட்டையைச் சேர்ந்த எம்.என்.எம்.ரிஹான் மற்றும் எம்.இஸட்.எப்.சஷ்ணா ஆகியோரின் புதல்வியாவார். 


நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் எம்.ஆர்.ரிப்கி அஹமட் 09 வயதுக்குட்பட்ட பிரிவில் வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال