Breaking News

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரி மாணவி சாதனை.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

அண்மையில் கொழும்பு  தர்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை ஆங்கில தினப் போட்டியில் தரம் 08 க்கு‌ரிய சொல்வதெழுதல் (Dictation) போட்டியில் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியின் மாணவி ஆர்.ஆர்.அமதுல்லாஹ் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.


இதன் மூலம் இம்மாணவி அதிபர் உட்பட ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்துக்கும் பெருமை சேர்த்துத் தந்திருக்கிறார்.


பாடசாலை நிர்வாகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை இம்மாணவிக்கும், ஆங்கிலப் பிரிவின் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவியின் பெற்றோர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறது.




No comments

note