கற்பிட்டியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கைகள்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
கற்பிட்டி தேத்தாவாடி, தில்லையூர் மற்றும் வாழைத்தோட்டம் கிராமங்களுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் பீ.எம் பாஹீம் தலைமையில் புதன்கிழமை(06) இடம்பெற்றது
இக் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல் தலைவர்கள், மீனவ சங்கத் தலைவர்கள், மகளீர் சங்கத் தலைவிகள், மீனவர்கள் என பலரையும் அவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்கள் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றிக்காக தமது ஆதரவுகளைத் தருவதாகவும் அத்தோடு தொலைபேசி சின்னத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் கற்பிட்டி பிரதேச வேட்பாளர் என்.டி.எம் தாஹீர் ஆகியோரின் வெற்றிக்காக முன்நிப்பதாகவும் தெரிவித்தனர்.
No comments