புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலயம் தரம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்திற்கு களவிஜயம்.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலயம் தரம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்திற்கு களவிஜயம் ஒன்றினை புதன்கிழமை (20) மேற்கொண்டனர்.
பாடசாலை அதிபர் ஜே.எம்.இல்ஹாம், பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் ஆகியோரது வழிகாட்டலில், பொறுப்பாசிரியர்களான எம்.ஏ.எப்.மஹீஷா, எம்.யூ. சாலிஹா உம்மா, எம். அனாருல்லா ஆகியோர் சகிதம் இந்த விஜயத்தினை அவர்கள் மேற்கொண்டனர்.
நூலகத்துக்கு விஜயம் செய்த
மாணவர்களையும்ஆசிரியர்களையும் பிரதம நூலகர் கே.எம். நிஷாத் உட்பட நூலக ஊழியர்கள் வரவேற்றதோடு, முக்கியமாக சிறுவர் பகுதியில் நூல்கள் தொடர்பாக மாணவர்களுக்கு நூலக அங்கத்துவம், நூல்களின் இரவல் வழங்கள் பகுதி, வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக சிறுவர் பகுதி பொறுப்பாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
பத்திரிகை வாசிப்பு பகுதி உள்ளிட்ட நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்கும் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு நூல்களை அவர்கள் சுயமாக வாசிப்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
No comments