கற்பிட்டியில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கிரேஸ் வேலைத்திட்டத்தின் ஊடாக சமாதான சபை அதிகாரிகளுக்கான செயலமர்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன்)
வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கிரேஸ் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டியில் உள்ள சமாதான சபை ( மத்தியஸ்தர் சபை) அதிகாரிகளை தெளிவூட்டும் வண்ணம் இடம்பெற்ற இரண்டு நாள் செயலமர்வு ஒன்று கற்பிட்டி அப்ஸரா வரவேற்பு மண்டபத்தில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் கிரேஸ் வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் தீப்திகா பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது
இச் செயலமர்வில் விரிவுரையாளர்களாக கிரேஸ் வேலைத்திட்டத்தின் விரிவுரையாளர் கே.ஏ.டி பீட்டர். நீர்கொழும்பு ஆசிரியர் ஜூட் பிரேமன் மற்றும் வலய கல்வி மேம்பாட்டாளர் துமங்கி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனிகன் என்பவன் யார் என்பதன் அடிப்படையில் நான் யார் என்பது தொடக்கம் மனிதனின் உறவு முறை அதனூடாக எதிர்நோக்கும் சாதக . பாதக செயற்பாடுகள் தொடர்பாகவும் மனித வாழ்வில் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக எதிர்கொள்ளும் மனநோய் பாதிப்புக்கள் பற்றிய தெளிவுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments