புத்தளம் வரலாற்றில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார் தே ம. சக்தியின் அபயரத்ன
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
புத்தளம் மாவட்டத்தின் வரலாற்றில் இதுவரை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றதில்லை. அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்ட வேட்பாளராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சனத் நிசாந்த சுமார் 80 000 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
இதுவே புத்தளம் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளாக பதிவாகியிருந்தது இதனை முறியடித்து இம்முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஹரிச்சந்திர அபயரத்ன 113334 விருப்பு வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
No comments