கல்முனை சாஹிராவின் 75ஆவது ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 75 ஆவது ஆண்டு நினைவினைக் கொண்டாடும் பவள விழா சிறப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்லூரியின் முதுசங்களான முன்னாள் பொறுப்பு அதிபர்கள், அதிபர் தரத்தில் உள்ள அதிபர்கள் மற்றும் தற்போது பாடசாலையில் கடமையாற்றுகின்ற அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்லூரி ஆரம்பித்து அதன் 75 ஆவது நினைவினைக் கொண்டாடும் முகமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளும் வகையிலான பெரிய கேக் ஒன்று வெட்டியும் மாணவர்கள் மற்றும் அதிதிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் அதிபர் ஏ. பீர் முஹம்மட் பாடசாலையின் வரலாறு பற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவரும் முன்னாள் அதிபருமான சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா கலந்து கொண்டதோடு, பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம்.எம்.இஸ்மாயில், ஐ.எல். ஏ. மஜீத், ஹம்ஸா, இசட். காலித், அஹமட் லெப்பை, அஸீஸ், பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் டாக்டர் சனூஸ் காரியப்பர் மற்றும் நிறைவேற்றிக் குழு உறுப்பினர் ரிஸ்வான் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கண்டு இந்நிகழ்வை சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments