Breaking News

கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசலையின் வாணிவிழா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம சனூன்) 

கற்பிட்டி அல்-அக்ஸா தேசியப் பாடசாலையில் வருடாந்தம் இடம்பெற்று வரும்  நவராத்திரி பூசைகள் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற்றது.     


விஜய தசமி அன்று விசேட பூசை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. திரு.வரதேஸ்வரக் குருக்கள் பூசைகளை நடாத்தி மாணவர்களை ஆசிர்வதித்து சிறப்புரை ஆற்றினார். 


இந்நிகழ்வினை இந்து சமய பாட ஆசிரியை திருமதி சஜீபா நெறிப் படுத்தியதுடன் இந்து சமய பெற்றோர்களின் பங்களிப்புடனும் அதிபர் மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழுவினரின் ஒத்துழைப்புகளுடன் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.













No comments