JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற வேட்டைத் திருவிழா, தேர் பவனி ரத உற்சவம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருமுகமும் மகா நவராத்திரி விழாவும் கடந்த 2024/10/03 ம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தினசரி மாலை  05: மணிக்கு ஸ்நபனம், அபிஷேகம், அலங்காரம், வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்று வருகின்றது


இந் நவராத்திரி விழா நிகழ்வின் பத்தாம்  நாள் சனிக்கிழமை (12) இரவு வேட்டைத் திருவிழா மற்றும் தேர் பவனி ரத உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வினை கற்பிட்டி இந்து ஆலயத்தின் பிரதம குரு கிரியா கிரமஜோதி, கிரியா தத்துவநிதி வாமதேவ சிவாச்சாரியார்  சிவ.ஸ்ரீ. ஸ்கந்த வரதேஸ்வரக் குருக்கள் தலைமையிலான குழுவினரால் சிறப்பாக நிகழ்த்தியதாக ஆலய நிர்வாக சபையின் தலைவர் ஜி. குபேந்திரன் தெரிவித்தார் .









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال