புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி மாணவிகள் புத்தளம் பொது நூலகத்துக்கு விஜயம்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் தங்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியான நூலக ஆய்வு கட்டுரை மேற்கொள்ளும் பொருட்டு அதற்காக வேண்டிய நூலகம் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காக புத்தளம் பொது நூலகத்துக்கு வெள்ளிக்கிழமை (09) காலை விஜயம் செய்தனர்.
தமது விரிவுரையாளர்கள் சகிதம் நூலகத்துக்கு விஜயம் செய்த இஸ்லாஹிய்யா மாணவிகளை பிரதான நூலகர் கே.எம்.நிஷாத் உள்ளிட்ட அங்கு கடமையாற்றும் அதிகாரிகளும் வரவேற்றனர்.
நூலகத்தின் பத்திரிகை வாசிப்பு பகுதி, சிறுவர் பகுதி, உசாத்துணை பகுதிகளுக்கு விஜயம் செய்த மாணவிகள் நேரடியாக நடைமுறைகளை அறிந்து கொண்டதுடன், தங்களது இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி நூலகத்துக்கு விஜயம் செய்யுமாறு பிரதம நூலகருக்கு அழைப்பு விடுத்தனர்.
புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகரும், இலங்கை நூலக சங்கத்தின் விரிவுரையாளருமான கே.ம். நிஷாத் இதன்போது நூலகம் தொடர்பாக வருகை தந்திருந்த மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.
No comments