Breaking News

புத்தளம் போல்டன் காற்பந்தாட்ட கழகத்திற்கு புதிதாக மேலங்கிகள்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் போல்டன் காற்பந்தாட்ட கழகத்திற்கு புதிதாக மேலங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


போல்டன் காற்பந்தாட்ட கழகத்தின் முகாமையாளர் எம்.எம்.நிஸ்வரின் வேண்டுகோள் பிரகாரம் புத்தளம் லெஜன்ஸ் காற்பந்தாட்ட கழகத்தின் ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீன் அவர்களினால் இந்த மேலங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மேலங்கி தொகுதியே கையளிக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பான எளிமையான நிகழ்வு அண்மையில் எம்.எம்.நிஸ்வர் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற போது போல்டன் கழகத்துக்கு புதிதாக இணைந்து கொண்டுள்ள முன்னாள் இலங்கை இராணுவ அணி வீரர் திரு.ராஜபக்ஷவிடம் லெஜன்ட்ஸ் கழக ஸ்தாபகர் முஹம்மது யமீன் இவைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.




No comments

note