இஸ்லாமிய கலை கலாசார மாகாண மட்ட ரபான் நடனப் போட்டியில் ஆலங்குடா முஸ்லிம் பாடசாலைக்கு இரண்டாம் இடம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
மாகாண மட்டத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய கலை கலாசார ரபான் நடன போட்டியில் கற்பிட்டி ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் சகூர் தெரிவித்துள்ளார்
இம் மாணவர்களை என்னேடு இணைந்து நெறிப்படுதிய பாடசாலையின் ஆசிரியர் ஜனாப் ஹசன் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் எம்மோடு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments