Breaking News

நாளை பாடசாலைகளுக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

(நமது நிருபர்)

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


பாடசாலை நேரத்தின் பின்னர் நாளைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரச துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்று திரட்டி ஆசிரியர் – அதிபர் கூட்டணியாக இணைக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.




No comments

note