Breaking News

ஆளுநர் நஸீர் அஹமடும், அலி சப்ரி எம்.பி. யும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன். கற்பிடடி எம்.எச்.எம் சியாஜ்)

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவரும், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினருமான ரனீஸ் பதூர்தீன் வடமேல் மாகாண ஆளுநருக்கும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவருமான எம்.எச்.எம். நவவி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.


புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதூர்தீன் அழைப்பின் பேரில் கடந்த திங்கட்கிழமை (8) புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்துக்கு வருகை தந்திருந்த போதே இவர்கள் இவ்வாறு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.







No comments

note