Breaking News

ரைஸ் குக்கரில் சோறு சமைக்க முற்பட்ட இரு பிள்ளைகளின் இளம் தாய் மின்சார தாக்குதலுக்குள்ளாகி பலி.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

ரைஸ் குக்கரில் சோறு சமைக்க முற்பட்ட இரு பிள்ளைகளின் இளம் தாய் மின்சார தாக்குதலுக்குள்ளாகி பலி.


(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)


புத்தளம், மன்னார் வீதி, வேப்பமடு, விழுக்கை எனும் பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்குள்ளாகி பலியானார்.


பாபு துஷ்யந்தி (வயது 28) என்பவரே மின்சார தாக்குதலுக்குள்ளாகி புதன்கிழமை (10) அதிகாலை  பலியாகியுள்ளார்.


இப்பெண்மனி (09) செவ்வாய்க்கிழமை இரவு புதிதாக வாங்கிய ரைஸ் குக்கரில் சோறு சமைக்க எத்தனிக்கும் தருவாயில்  மின்சாரம் தாக்குள்ளாகி உயிர் இழந்துள்ளார்.  


புத்தளம் தள வைத்தியசாலையில் புதன்கிழமை (10) காலை  புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் முன்னிலையில் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் இடம்பெற்றது இந் நிலையில் இறந்தவரின் தந்தை தனது மகளின் மரணத்நில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாளை நீதவானின் தீர்ப்புக்கு அமைய பிரேத பரிசோதணை இடம் பெறும் என தெரிவிக்ஙப்பட்டதுடன் இறந்தவரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

note