Breaking News

அல்-ஹுதா குர்ஆனிய பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பா.உ அலி சப்ரி றஹீம்

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

நுரைச்சோலை அல்-ஹுதா குர்ஆன் பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வைபவ ரீதியாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்தார்கள்.


 கௌரவ அதிதியாகவும், விசேட உரை நிகழ்த்துவதற்காகவும் புத்தளம் அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளரும் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் பணிப்பாளருமாகிய அஷ்ஷேக் எச். அப்துல் நாசர் அழைக்கப்பட்டிருந்தார்.


குறித்த குர்ஆன் பாடசாலையின் தலைவர் அஷ் ஷைக்  ஆசிக் மௌலவின் தலைமையில்

 நடைபெற்ற இந்த நிகழ்வில் பணிப்பாளர் சபை தலைவர்  அஷ்ஷேக் சகீன் மௌலவி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமின் நுரைச்சோலை அமைப்பாளர் ஹஷீப் நிஜாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் நஜாத் ஆசிரியர், ஆலங்குடா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் சகூர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் அமீர் அலி ஆசிரியர் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள், வர்த்தகர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.


குறித்த நிகழ்வின் ஒருங்கிணைப்பு தொடர்பாகவும், அதன் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் ஏற்பாட்டுக் குழுவுக்கும்,  நிகழ்ச்சிகளை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் விசேட நன்றிகளை  பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தமது உரையில் தெரிவித்தார்.













No comments

note