Breaking News

நுரைச்சோலை மதுரஸாவில் ஆரம்பமான மரம் வளர்க்க கரம் கொடுப்போம் வேலைத்திட்டம்

(கற்பிட்டி எம். எச். எம் சியாஜ் புத்தளம் எம். யூ.எம் சனூன்)

பாலைவன மாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு வை.எம்.எம்.ஏ யின் கற்பிட்டி கிளை ஏற்பாட்டில் "மரம் வளர்க்க கரம் கொடுப்போம்" எனும் மரம் நடும் வேலைத்திட்டம்  நுரைச்சோலை  அமானியத்துல் இப்றாஹீமிய்யா மத்ரஸா வளாகத்தில் ஆலோசகர் எச்.எம் சுஹைப் தலைமையில்  இடம்பெற்றது 


இந் நிகழ்வில் வை.எம்.எம்.ஏ யின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.டி.எம் நபீல் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் மதுரஸாவின் அதிபர் எம்  ஐ.எம் முபாரக் மௌலவி, ஆங்கில பாட ஆசிரியர் எம். அலி சப்ரி மற்றும் மதுரஸா விரிவுரையாளர்கள், மௌலவிமார்கள், மாணவர்கள், என பலரும் கலந்து சிறப்பித்ததுடன் கற்பிட்டி வை.எம்.எம்.ஏ கிளைத் தலைவர் ஏ.எச்.எம்.எம் ஷாபி இந் நிகழ்வை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.









No comments

note