புத்தளம் - நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் நான்கு மாணவர்கள் ஆங்கில மொழி தினப் போட்டியில் வலய மட்டத்திற்கு தெரிவு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் நான்கு மாணவர்கள் அன்மையில் கோட்ட மட்டத்தில் இடம்பெற்ற ஆங்கில மொழி தினப் போட்டியில் வெற்றிபெற்று வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எம் ஹுதைபா தெரிவித்துள்ளார்.
இதன்படி தரம் 04 ஐச் சேர்ந்த எம்.ஆர்.எப் றிதா கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தையும் எப்.என்.எம் நந்தா மரியம் இரண்டாம் இடத்தையும் மற்றும் தரம் 03 ஐச் சேர்ந்த எம்.எப் சபியா அனா இரண்டாம் இடத்தையும் பெற்றதுடன் பார்த்தெழுதல் போட்டியில் தரம் 04 ஐச் சேர்ந்த எம்.ஆர்.எப் றிதா மற்றும் தரம் 05 ஐச் சேர்ந்த எம்.எப் றிதா ஆகிய இருவரும் இரண்டாம் இடங்களை பெற்று வலய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
இது பற்றி கருத்து தெரிவித்த பாடசாலையின் அதிபர் மிக நீண்ட காலத்திற்கு பின்பு ஆங்கில மொழி தினப் போட்டியில் தமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமையாக உள்ளதாகவும் இவர்களை வழி நடாத்தி ஊக்கப்படுத்திய ஆசிரியர் திருமதி சஹீனாவுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் உப அதிபர் புவாஸ் சார்பாகவும் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் அதிபர் எம்.எம் ஹுதைபா தெரிவித்துள்ளார்.
No comments