Breaking News

புத்தளத்தில் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு  செயலமர்வொன்று, புத்தளம் பிரதேச செயலக  எல்லைக்குள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும்

Pink Plus - Charity for Cancer எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த செயலமர்வு 27 ம் திகதி சனிக்கிழமை மாலை 04 மணியிலிருந்து புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம்பெறவுள்ளது.


இச்செயலமர்வில் வைத்திய அதிகாரி எச்.வசீமா (BUMS)  வளவாளராக கலந்து சிறப்பிக்க உள்ளார். 


இச்செயலமர்வில் தாய்மார்கள்,சகோதரிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




No comments

note