Breaking News

வடமேல் மாகாண ஆளுநரின் புத்தளம் மாவட்ட இணைப்புச் செயலாளராக றபாத் அமீன் நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமடின் புத்தளம் மாவட்டத்திற்கான இணைப்பு செயலாளராக மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் வலய அமைப்பாளருமான ஏ.ஆர்.எம் றபாத் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்நியமனம் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார மற்றும் முன்னாள் சபாநாயகர் தேசபந்து கருஜயசூரிய ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


வடமேல் மாகாண ஆளுநரின் புத்தளம் மாவட்ட இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முதல் சிறுபான்மை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments