JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் மஷாரி எஹியா ஆப்தீன் அஹ்கம் சதுரங்க ("CHILDREN'S CHESS FESTIVAL - 2024") போட்டியில் சாம்பியன்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 07 ஐச் சேர்ந்த மாணவன் மஷாரி எஹியா ஆப்தீன் அஹ்கம் நாத்நான்டி ஜனாதிபதி கல்லூரியில் இடம்பெற்ற சிறுவர் சதுரங்க கொண்டாட்டம் 2024 இன் 13 வயது பிரிவின் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று செம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இம் மாணவனுக்கான  சான்றிதழையும் பதக்கத்தையும் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஏ அஸ்ரப் வழங்கி கௌரவித்தார்.


இம்மாணவனை பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் , ஆசிரியர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


மாணவன் மஷாரி எஹியா ஆப்தீன் அஹ்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா அவர்களின் செல்வப் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال