JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி - தில்லையூர் ஆரம்ப பாடசாலையின் வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

 கற்பிட்டி ரிஸ்வி ஹூஸைன் 

கல்பிட்டி தில்லையூர் முஸ்லிம் வித்தியாலய அபிவிருத்தி குழு மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அதிபர் எஸ். எம். அரூஸ்  தலைமையில் World Vision Lanka நிறுவனத்தின் நிதியுதவியில் தரம் 09 வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (29) தில்லையூர் முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் என். எம். ஆர். தீப்தி பர்ணாந்து , விஷேட அதிதியாக Development Facilitator World Vision Lanka ஏ. ஐ. பீ.ரத்வத்த பங்கேற்றிருக்க, அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம். நவ்ப் , ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபர் திருமதி சகீலா , புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் ரியாஸ், புதுக்குடியிருப்பு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நாஜியா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்பிட்டி முகநூல் ஊடகவியலாளர் ரிஸ்வி ஹுஸைன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال