JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - புதுக்குடியிருப்பு கொலனியைச் சேர்ந்த சித்தி சனூபா அவர்கள் காலமானார்.

புதுக்குடியிருப்பு கொலனியைச் சேர்ந்த மர்ஹும் அப்துல் முத்தலிப் அவர்களின் அன்பு மனைவி சித்தி சனூபா அவர்கள் இன்று (29) திங்கட்கிழமை காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னார் நசீரா, சுல்பிகா, தாஜுதீன், ரஹீம், சியாவுதீன், லருப்தீன், பெரோஸா, சப்ரினா ஆகியோரின் அன்புத் தாயாரும், நிலாம், ரிவான், நஸ்லின் மெளலவி, சிபாயா (கனமூலை), ருக்ஸியா, சாமிலா, நஸ்மின், ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (30) காலை 10.00 மணிக்கு புதுக்குடியிருப்பு  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ

اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


நீங்களும் அந்த ஜனாஸாவுக்காக உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அருள் செய்வானாக!.


தகவல்

ஹபீல் நிஜாமுதீன் (கபூரி)

பொருலாளர் அஸ்ஸபா பௌவுண்டேஷன்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال