கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் முதலிடம்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
வட, வடமேல் மற்றும் வடமத்திய மாகாண அரபுக் கல்லுரிகளுக்கிடையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் குர்ராஃ ஏற்பாட்டில் அண்மையில் (06) நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் 15 ஜுஸ்உ பிரிவில் கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவர் முஹம்மத் அக்ஸான் இப்னு மஃரூப் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டார்.
தில்லையடி முஹாஜிரீன் மத்ரஸாவில் நடைபெற்ற மேற்படி போட்டியில் கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி சார்பாக போட்டியிட்ட மற்றுமொரு மாணவர் முஹம்மத் அம்மார் இப்னு நஜ்ஜார் நான்காம் இடத்தை தனதாக்கி கொண்டார்.
கல்பிட்டி மண்ணுக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த குறித்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்றுவித்த உஸ்தாத்மார்களுக்கும் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் முபாஸில் உள்ளிட்ட நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
No comments