கற்பிட்டி நகரில் பெருந்தொகையான மஞ்சளுடன் ஒருவர் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி பகுதியில் 25 மூடைகளில் சுமார் 943 கிலோ மஞ்சளை சட்டவிரோதமாக எடுத்து செல்லும் போது கற்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்
இது பற்றி தெரியவருவதாவது இந்தியாவில் இருந்து அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 25 மூடைகளில் 943 கிலோ மஞ்சளை துரையடி பகுதியில் இருந்து டிமோ பட்டா வாகனத்தின் வாயிலாக வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபில்யூ.பீ எதிரிசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய பீ.எஸ் 55118, 41191, பீ.எஸ்.டி 80413 ஆகிய இலக்கங்களை உடைய மூவர் அடங்கிய குழுவினரால் இன்று (12) மேற்கொள்ளப்பட சுற்றிவலைப்பில் கைப்பற்றப்பட்டதுடன் வாகான சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கைப்பற்றப்பட்ட மஞ்சள் வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட சாரதி ஆகியவைகள் நீதிமன்றில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
No comments