JobVibe.lk - Sri Lanka Job Portal

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.


சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.


சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.


மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,  வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். 


திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40  km  வேகத்தில் அடிக்கடி  காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 55 - 60 km ஆக அதிகரித்துக் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும்  கொந்தளிப்பாகக் காணப்படும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் காற்று வீசும்.இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال