Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

அல்குர்ஆனையும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினரும்  வாழ்க்கைத் தத்துவத்தை பின்பற்றும் எனது சகோதர இஸ்லாமிய உள்ளங்கள் அனைவருக்கும் இந்த தியாகப் பெருநாள் இறை நெருக்கத்தையும் ஆன்மீக  முயற்சியையும் பெற்றுத் தரும் உன்னத திருநாளாக அமையட்டும் தனது வாழ்த்துச் செய்தியில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் 


இப்ராஹிம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக்கி அவரது தியாக உள்ளத்தை முன்மாதிரியாக காட்டித் தருகிறான் இறைவன்.


எமது அழகிய இலங்கை தீவு பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்த வேளை எமது மக்கள் பல தியாகங்களை செய்ததன் விளைவாக சமகாலத்தில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வருவதை நாம் அவதானிக்கின்றோம்.


தொடர்ந்தும் நாடு முன்னேற்றமடைய இந்த தியாகத் திருநாளில் பிரார்த்தித்துக் கொள்வதோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


அலி சப்ரி ரஹீம் 

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்




No comments