Breaking News

சிதம்பரம் கணித போட்டிப் பரீட்சையில் கணமூலை பாடசாலையின் இருவர் சித்தி

(நமது நிருபர்)

அண்மையில் நடைபெற்ற சிதம்பரம் கணித போட்டிப் பரீட்சையில் கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவிகளான எம் எப்.எப் அல்ஹா மற்றும் எம்.எப்.என் நதா ஆகிய இரண்டு மாணவிகளும் சித்தியடைந்துள்ளனர். 


மேற்படி இரு மாணவிகளின் வெற்றிக்காக பாடுபட்டு தனது முழுமையான பங்களிப்பை வழங்கிய ஆசிரியை ஏ ஏ. சமீராவிற்கும் பாடசாலைக்கு பெறுமை தேடித்தந்த மாணவிகளுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.




No comments