JobVibe.lk - Sri Lanka Job Portal

வெல்வோம் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம் யூ.எம் சனூன்)

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் "நானே ஆரம்பம் வெல்வோம் சீறி லங்கா ஸ்மார்ட் சூரன்களோடு" எனும் வேலைத்திட்டம் மாவட்டம்தோரும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 


இதன்படி புத்தளம் மாவட்டத்திற்கான செயற்திட்டம்  ஜுன் 14, 15 ம் திகதிகள் சிலாபம் சார்லி குரேயா மைதானத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்ப் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம் பெற்றது. 


இதன்போது  கற்பிட்டி பிரதேச செயலகத்தில் உள்ள பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம்.எச்.யூ பரீதா பாடசாலைக்கான ஸ்மார்ட் போர்டை அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் .


இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹிம் மற்றும் சின்தக மாயாதுன்னே , புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال