புத்தளம் - பாலாவி ஸ்ரீ போதிருக்காராம விகாராதிபதி காலமானார்...!
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - பாலாவி உப்பளத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ போதிருக்காராம பழைய விகாரையின் விகாராதிபதி நேற்று (31) திடீரென உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவே மோதரத்ன தேரர் (வயது 51) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற நேற்று (31) மாலை அந்த விகாரைக்கு சென்ற ஒருவர், விகாராதிபதி உடல்நலக்குறைவு காரணமாக கீழே வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்களின் உதவியுடன் குறித்த விகாராதிபதிக்கு தேவையான முதலுதவிகளை செய்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதிலும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், குறித்த விகாராதிபதியின் பூதவுடல் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை முன்னெடுத்த பின்னர் விகாராதிபதியின் பூதவுடலை புத்தளம் மகாநாயக்க தேரரிடம் ஒப்படைத்தார்.
No comments