JobVibe.lk - Sri Lanka Job Portal

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடும். 


மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 


சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின்  சில இடங்களிலும் 150 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


புத்தளம்  தொடக்கம் கொழும்பு,மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


ஹம்பாந்தோட்டை  தொடக்கம் பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 ‐ 65 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் . இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் இக் கடல் பிராந்தியத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 


காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு  வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 


கற்பிட்டி தொடக்கம்  கொழும்பு, காலி,ஹம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில்  வரையான  கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப்பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. 


கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال