கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபராக நவ்ப் பதவி ஏற்பு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எம்.ஐ.எம் அஸ்ரப் அலி கடந்த 01 ம் திகதி ஓய்வு பெற்றதை அடுத்து மேற்படி பாடசாலைக்கு கப்பலடி முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய எம்.எம்.எம் நவ்ப் இன்று (03) கற்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி தீப்தி பர்ணாந்து முன்னிலையில் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபராக கடமைப்பொறுப்பேற்றார்.
ஆசிரியர் சேவையில் 27 வருடங்களை கடந்த நிலையில் இதில் 13 வருடங்கள் கற்பிட்டி கப்பலடி முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இவர் கற்பிட்டி பிராந்திய அதிபர் சங்கத்தின் பொருளாராகவும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments