JobVibe.lk - Sri Lanka Job Portal

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல்

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் பொருந்தும் பணிகளுக்காக கபூல் செய்து கொள்வானாக ஆமீன். 


புத்தளத்தில் மார்க்க விடயங்களை கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் பிறை செயற்பாட்டு குழு பிறை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 


மேற்படி இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளி பிறை குழுவின் உதவி செயலாளர் அஷ்ஷேய்க் அப்துர் ரஹ்மான் (ஹிலாலி )அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். 


இந்நிகழ்வில் பலன்களை அடைந்துக் கொள்வதற்கும் நோன்பு மற்றும் ஹஜ்ஜுடைய காலங்களில் பிறை சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்ந்து கொள்வதற்கும் உலமாக்கள் மத்ரஸா உஸ்தாத்மார்கள் மத்ரஸா விடுகை வகுப்பு மாணவர்கள் மஸ்ஜித் நிர்வாகிகள் சமூக சேவையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


இடம்: புத்தளம் பெரிய பள்ளி 

காலம் : 06.06.2024 வியாழக்கிழமை

நேரம் : மாலை 4.00 முதல் 6.00 வரை 


தலைவர் எம்.பி.எம்.  ஜிப்னாஸ் (அல்மிஸ்பாஹி)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை 


செயலாளர் 

எச். எம்.எம் அஸீம் (ரஹ்மானி) 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை 


பிறைக் குழு பொறுப்பாளர்  

ஐ.எல். அமீன் (ரஹ்மானி)

எப். எச். ரகீப் அஹ்மத் (அர்ரஷாதீ)

அகில இலங்கை 

ஜம்இய்யத்துல் உலமா 

புத்தளம்

நகர கிளை




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال