Breaking News

நுஹா பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

(புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு  என். எம். ஹபீல் (Ghafoori,JP)

புதுக்குடியிருப்பு, மதீனா லேன் நுஹா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை ஜுன் மாதம் 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாலர் பாடசாலையின் ஆசிரியை A.S.F. மர்ஸுக்கா அவர்களின் தலைமையில் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் அப்ரா ஹாட்வயாருக்கு அருகில் சிறப்பாக நடைபெற்றது.


பாலர் பாடசாலை மாணவர்கள் தமது கணித அறிவு, சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி,வியாபார நுனுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த  சந்தை நிகழ்வு இடம் பெற்றது.


குறித்த சிறுவர் சந்தையில் சிறார்கள் தத்தமது வீட்டுத்தோட்டத்து காய்கறிகள்,தேங்காய், கீரை வகைகள்,பழங்கள்,கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர். 


இந் நிகழ்வில் பாலர் பாடசாலை அதிபர், ஆசிரியைகள், பெற்றோர்கள் என அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்


சிறுவர்களின் அறிவு ஆற்றலை மேம்படுத்தி செயற்பாட்டு திறன்மிக்கதாக கொண்டு வரும் நோக்கோடு வியாபாரம் மற்றும் பொருளாதாரம் ரீதியாக சிறார்களை செயற்பட தூண்டுதலை  நோக்காக கொண்டு இச் சிறுவர் சந்தை வருடா வருடம்  நடைபெற்று வருவதாகவும் இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை பெற்றோர்களுடன் இணைந்து எமது பாலர் பாடசாலையின் ஆசிரியர்களான A.S. இஸ்ஸத், A.F. அப்ரா,  ஆகியோர்  வழங்கி வருகின்றதனையும் பாடசாலை அதிபர் சுட்டிக்காட்டியதோடு இப் பாலர் பாடசாலையில் கல்விச் சுற்றுலா, Electrostatic வகுப்புகள், தரம் முதலாம் ஆண்டு செல்வதற்கான பிள்ளைகளை தயார் படுத்தல் என பூரண பயிற்சிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.


சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை பெற்றோரும், பெற்றோர்கள் ஆசிரியர்கள் சிறுவர்கள் சகலரும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர். 


எனவே இந்நிகழ்வில் கலந்து பங்கேற்க பாலர் பாடசாலை சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.












No comments

note