Breaking News

புத்தளத்தில் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

புத்தளத்தில் உள்ள அந்நத்வா லி இஸ்லாஹில் உம்மா மஅ இக்ராமில் அயிம்மா என்ற உலமாக்களின் அமைப்பினால் இன்று 08.06.2024 சனிக்கிழமை இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரின் வளாகத்தில் உலமாக்களுக்கான ஒன்று கூடல் இடம் பெற்றன.


இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து சிறப்பித்தனர்.


இந்த ஒன்றுகூடலில் அனைத்து உலமாக்களின் முன்னிலையில் அந்நத்வாவின் தலைவரரும் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபருமாகிய அஷ்ஷெக் ஏ.எல்.எம். சனூஸ் அர்ரஹ்மானி அவர்களின் கரங்களால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள மாவட்டத்தின் உபதலைவருமாகிய அஷ்ஷேக் எம்.பி.எம். ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி அவருக்கு பொன்ஆடை போர்த்தப்பட்டன. 


அந்நத்வா அமைப்பானது 2011 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இது வரை காலமும் உலமாக்களின் நலன் சார்ந்த விடயத்திலும் சமூகம் சார்ந்த விடயங்களிலும் ஈடுபடுகின்றன.


இதனை ஆரம்பித்தவர்கள் அஷ்ஷேக் சனூஸ் ரஹ்மானி அஷ்ஷேக் அப்துல் வாஹித் காசிமீ அஷ்ஷேக் ரியாஸ் தேவ்பந்தி அஷ்ஷேக் ரியாஸ் ரஷாதீ அஷ்ஷேக் நஜீபுத்தீன் ஹஸனீ இவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று 100 க்கும் மேற்பட்ட உலமா உறுபாபினர்களை கொண்டுள்ளது. 


அந்நத்வா 

தலைவர் 

அஷ்ஷேக் ஏ.எல்.எம். சனூஸ் அர்ரஹ்மானி













No comments

note