புத்தளம் மாணவர்கள் பங்கேற்ற இலங்கை மாதிரி ஐக்கிய நாடுகளின் (SLMUN) பிராந்திய பட்டறை
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
இலங்கை மாதிரி ஐக்கிய நாடுகளின் (SLMUN) பிராந்திய செயலமர்வு, வயம்ப மாதிரி ஐக்கிய நாடுகள் சபையுடன் (WMUN) இணைந்து புத்தளம் ஐ.பீ.எம்.மண்டபத்தில் அண்மையில் (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளை சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இலங்கை முழுவதிலும் உள்ள மாதிரி ஐக்கிய நாடுகளின் முன்னோடியான, இலங்கை ஐக்கிய நாடுகளின் சபை இளைஞர்களிடையே தலைமைத்துவம் மற்றும் இராஜதந்திர திறன்களை தொடர்ந்தும் வளர்த்து வருகின்றது.
மதுரங்குளி எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை இந்த செயலமர்வினை அதிக ஈடுபாட்டோடு வெற்றிகரமாக நடாத்தியது.
மாணவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளல், பல்வேறு பாடசாலைகளின் மாணவர்களிடையே தொடர்பாடல்களை மேம்படுத்தல், உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் பொதுப் பேச்சுத் திறனைப் பற்றிய அவர்களின் புரிதலை மேம்படுத்தல் என்பன இச்செயலமர்வின் வரப்பிரசாதங்களாக அமைந்தன.
இந்த செயலமர்வானது எதிர்கால தலைவர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.
WMUN மாநாடு ஜூன் மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் சர்வதேச பாடசாலைகள், சிலாபம், புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய இருமொழி பாடசாலைகளை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments