Breaking News

கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட கால தேவையாக காணப்படும் பொது மலசல கூடம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ எம் சனூன்)

கற்பிட்டி பிரதேசம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்கு வகிக்கும் ஒரு உல்லாச பயண சுற்றுலாத்தளமாகும். 


கற்பிட்டி பிரதேசத்தில் ஒரு பொது மலசல கூடம் இல்லாமை என்பது  கற்பிட்டி பிரதேசத்தின் வளர்ச்சி பாதைக்கு ஒரு முட்டுக்கட்டையாகும் 

கற்பிட்டி பிரதேசத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வருகை தருபவர்கள் தமது அத்தியவசிய இயற்கை தேவைகளை கற்பிட்டி நகரில் நிறைவேற்றிக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 


இப் பொது மலசலகூட வசதி இன்மை பற்றி இதுவரை காலமும் பல்வேறு தரப்பினர் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டு வந்துள்ள போதும் சகலரினதும் அசமந்த போக்கின் காரணமாக இது வரை காலமும் பொது மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்படாமலேயே இருக்கின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாக காணப்படுவதாக வர்த்தகர்களும் பயணிகளும் கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




No comments

note