கடலரிப்புக்கு உள்ளாகும் முத்துப்பந்திய தீவு
ரஸீன் ரஸ்மின்
aசிலாபம், முத்துப்பந்திய தீவின் கரையோர பகுதி கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
சில நாட்களாக கடல் சீற்றம் காரணமாகவே நேற்று (05) முதல் குறித்த தீவுப் பகுதியின் கடல் இவ்வாறு கடுமையாக அரிக்கத் தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கரையோர அரிப்பைக் குறைக்க அங்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய மணல் தடுப்பு உடைந்துள்ளதுடன், கரையோரப் பகுதிகள் சில மீட்டர் தூரம் வரை கடுமையாக சேதமடைந்துள்ளன.
கடலோரப் பகுதிக்கு இணையான முத்துப்பந்தி தீவில் உள்ள சிறிய வீதியொன்றும் கடலரிப்பால் சேதமடையத் தொடங்கியுள்ளது என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், முத்துப்பத்திய தீவின் வடக்குப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பெரும் பாறைகள் படிந்துள்ளதால் கரையோரப் பகுதி தற்போது பாதுகாப்பாக மாறியுள்ளது.
No comments